ஆதரித்துப் பலவகைப் பொருளுந்தேடி
பழந்தமிழா லறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தா லுலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோருங் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து பொருளுந்தேடி
பூலோக முள்ளளவும் வாழ்வார் தாமே