முதல்பக்கம்
பாடல்கள்
தமிழ் பாடல்கள்
பாரதியார் பாடல்கள்
ஆங்கலப் பாடல்கள்
காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்
கதைகள்
கதைகள் பாடல்களாக
ஸ்லோகங்கள்
திருக்குறள்
காணொலி
எங்களைப்பற்றி
உங்கள்கருத்துகள்
பாரதியார் பாடல்கள்
வந்தே மாதரம்
பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி
நாட்டு வணக்கம்
பாரத நாடு
ராகம்--புன்னாகவராளி
எங்கள் நாடு
வெறிகொண்ட தாய்
இன்னும்...
பாரத மாதா நவரத்தின மாலை
பாரத தேவியின் திருத்தசாங்கம்
தாயின் மணிக்கொடி
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்
பாரத சமுதாயம்
ஜாதீய கீதம்-1
ஜாதீய கீதம்-2 (புதிய மொழி பெய்ர்ப்பு)
செந்தமிழ் நாடு
தமிழ்த் தாய்
தமிழச் சாதி
வாழிய செந்தமிழ்
சிறிதாக்க...
வெறிகொண்ட தாய்
ராகம்-ஆபோகி தாளம்-ரூபகம்
1. பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும்
பித்துடை யாள்எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன்-தனைக்
காதலிப் பாள்எங்கள் அன்னை. (பேயவள்)
2. இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
3. தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)
4. வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள். (பேயவள்)
5. பாரதப் போரெனில் எளிதோ?-விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும்-கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)
- ஆசிரியர் :*
7/19
Previous
Next
Share