செய்கையுஞ் சீலமுங் குன்றிய பின்னரும் உய்வகைக் குரிய வழிசில உளவாம். மற்றிவர், சாத்திரம்-(அதாவது,மதியிலே தழுவிய கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்:- 70
ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின் மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை இந்தநாள் எமது தமிழ்நாட் டிடையே அறிவுத் தலைமை தமகெனக் கொண்டார் தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்; 75
ஒரு சார், மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின் செய்கையும் நடையும் தீனியும் உடையும் கொள்கையும் மதமும் குறிகளும், நம்முடை யவற்றினுஞ் சிறந்தன; ஆதலின், அவற்றை 80
முழுதுமே தழுவி மூழ்கிடி னல்லால், தமிழச் சாதி தரணிமீ திராது, பொய்ததழி வெய்தல் முடி பெனப் புகலும். நன்றடா!நன்று!நாமினி மேற்றிசை வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ. 85
கலிதடை புரிவன், கலியின் வலியை வெல்லலாகாதென விளம்புகின் றனரால், நாசங் கூறும்நாட்டு வைத்தியர் இவராம், இங்கிவ் விருதலைக் கொள்ளியி னிடையே நம்மவர் எப்படி உய்வர்? 115
விதியே! விதியே!தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
விதி
மேலேநீ கூறிய விநாசப் புலவரை நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சமொன்று இல்லை. ஆரிய நாட்டின் அறிவும் பெருமையும்