3. கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் கோடி கோடி புயத்துணை கொற்றமார் நீடு பல்படை தாங்கிமுன் நிற்கவும் கூடு திண்மை குறைந்தனைஎன்பதென்? ஆற்றலின் மிகுந்தனை,அரும்பதங் கூட்டுவை மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை (வந்தே)
4. அறிவுநீ,தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை மருமம்நீ,உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ; தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீ ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்வச் சிலையெலாம்,தேவி,இங்குனதே. (வந்தே)